search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கற்பக விருட்சமாக அருள்புரியும் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர்
    X

    கற்பக விருட்சமாக அருள்புரியும் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர்

    • இந்த கற்பகவிநாயகருக்கு பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன.
    • கற்பக விநாயகருக்கு முன்பாக 16 திரிகளை கொண்ட ஷோட விளக்குகள் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பத்தூரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 73 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது பிள்ளையார்பட்டி. இங்குள்ள கற்பக விநாயகர் கோவில் கருவறை கோவிலாக உள்ளது. இந்த கற்பகவிநாயகருக்கு பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன.

    கற்பக விநாயகருக்கு முன்பாக 16 திரிகளை கொண்ட ஷோட விளக்குகள் எப்போதும் எரிந்து கொண்டே இருப்பதை பக்தர்கள் காணலாம். இவ்வாறு பக்தர்களுக்கு 16 வகையான பேறுகள் கிடைக்க நமக்கு உணர்த்தவே இந்த 16 திரிகள் மூலம் விளக்கு ஏற்றப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு மற்றும் தமிழ் புத்தாண்டுகளில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.

    இதேபோல் ஆண்டிற்கு ஒரு முறை ஆவணியில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சதுர்த்திக்கு 9 நாட்களுக்கு முன்பாக காப்புக்கட்டி 10 நாட்கள் நடைபெறும் விழாவில் 2 முதல் 8-ம் திருநாள் காலையில் வெள்ளி கேடயத்தில் சுவாமி புறப்பாடும், இரவு பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். 6-ம் நாளில் கஜமுக சூரசம்ஹாரம், 9-வது நாளில் தேரோட்டம் நடைபெறும்.

    அன்றைய தினத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மூலவர் விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார். 10-ம் திருநாள் காலையில் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரியும், மதியம் மூலவருக்கு முக்குறுணி கொலுக்கட்டை படையல், இரவு பஞ்சமூக சுவாமிகளின் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். இது தவிர சித்திரை தமிழ் வருட பிறப்பின் போதும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.

    Next Story
    ×