என் மலர்
வழிபாடு
X
ஆனைமலையில் ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்11 Nov 2022 11:43 AM IST
- பெருமாளுக்கு 9 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
- பெண்களுக்கு திருமாங்கல்யம் வேண்டி பூஜைகள் நடைபெற்றது
ஆனைமலையில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருமாங்கல்ய சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீ ரங்கநாத பெருமாளுக்கு 9 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதையடுத்து பூக்கள், மற்றும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
9 பழங்கள் வைத்து பெண்களுக்கு திருமாங்கல்யம் வேண்டி தீபாராதனை காண்பித்து பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
X