search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிவலிங்கமாக மாறிய 12 ருத்ராட்சங்கள்
    X

    சிவலிங்கமாக மாறிய 12 ருத்ராட்சங்கள்

    • கண்ணன் கூறியபடியே பீமன் செய்தான்.
    • ருத்ராட்சம் சிவனாக மாறியபோது மிருகம் மயங்கி நின்றது.

    சிவாலய ஓட்டத்தில் தொடர்புடைய 12 சிவத்தலங்கள் உருவாக மகாபாரதசம்பவம் காரணமாக கூறப்படுகிறது. யுத்தம் முடிந்த நேரத்தில் தர்மர் பெரிய யாகம் ஒன்றை செய்ய விரும்பினார். யாகத்தில் கொடிய மனிதனும், சிங்கமும் கலந்த புருஷா மிருகத்தின் பால் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    அதனிடம் பால் கறக்க பீமன் சென்றான். அப்போது கண்ணன் அவனிடம் 12 ருத்ராட்சங்களை கொடுத்து பீமா, புருஷா மிருகம் சிவன் நாமம் தவிர வேறு எதையும் கேட்காது. நீ கோவிந்தா, கோபாலா என்று சொல்லிக் கொண்டு போ, அது உன்னை துரத்தும். அப்போது ருத்ராட்சத்தை ஒவ்வொரு இடமாக போடு. அது சிவலிங்கமாக மாறும். மிருகம் சிவனை வழிபட்டு மயங்கும். அப்போது பால் கறந்துவிடு என்றார்.

    கண்ணன் கூறியபடியே பீமன் செய்தான். ருத்ராட்சம் சிவனாக மாறியபோது மிருகம் மயங்கி நின்றது. ஆனால் பால் கறக்க தொடங்கியதும் விழித்துவிட்டது. அதனால் பீமன் ஓடினான். 12 ருத்ராட்சங்களும் தீர்ந்து விட்டன. கடைசியில் மிருகம் பீமனின் ஒரு காலை பிடித்துவிட்டது. அந்த கால் மிருகத்துக்கு சொந்தமான காட்டில் பதிந்திருந்தது. இந்த நேரத்தில் அங்கு வந்த தருமர், பீமனின் ஒரு காலை மிருகம் எடுத்துக் கொள்ளலாம் என்று நியாயம் சொன்னார்.

    உடனே ருத்ராட்சங்கள் விஷ்ணு உருவங்களாக மாறின. இதைக்கண்ட புருஷா மிருகம் ஞானம் பெற்றது. பீமனும் தன் அகந்தை ஒழித்தான். பீமன் ஸ்தாபித்த 12 சிவாலயங்களும் வழிபாட்டுக்கு உரியதாயின. இதற்கு எடுத்துக்காட்டாக திக்குறிச்சி கோவில் முன்மண்டபத்தில் பீமன் கதாயுதத்துடன் நிற்பதும், சிங்கமும் மனிதனும் கலந்த ஒரு உருவம் நிற்பதுமான புடைப்புச் சிற்பம் உள்ளது.

    Next Story
    ×