என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
நோய் தீர்க்கும் மருந்தான சாய் பாபா விபூதி
- பிரசவம் ஆன இரண்டு நாள் கழித்து திடீரென்று வயிறு உப்பி மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டார்.
- தன் மனைவியின் வலது மணிக்கட்டில் புனித கயிறைக் கட்டி, உப்பிய வயிற்றுப் பகுதியில் சிறிது விபூதியை தடவினார்.
பகவான் சாய் பாபா இந்தக் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என்று பெருமிதத்துடன் சொல்லிப் பூரிக்கிறார்கள் பக்தர்கள். பாபாவை மனமுருகப் பிரார்த்திப்பதையும் அவரைச் சரணடைந்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வேண்டுவதும் என லட்சக்கணக்கான மக்கள் பாபா வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஷீரடி சாய் பாபாவின் பரம பக்தரான ஒருவரது மனைவி, பிரசவம் ஆன இரண்டு நாள் கழித்து திடீரென்று வயிறு உப்பி மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டார்.
பிரசவம் பார்த்த பெண் மருத்துவர், அந்தப் பெண்மணியை உடனடியாக வேறு பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டார். அதைக் கேட்டு கூடியிருந்த அனைவரும் அழ ஆரம்பித்து விட்டனர்.
அந்த சமயத்தில் அந்தப் பெண்ணின் கணவரான பக்தர், பாபா, தயவு செய்து எனது மனைவியைக் காப்பாற்று! என்று சத்தம்போட்டு பிரார்த்தித்தார். பின்னர் தன் மனைவியின் வலது மணிக்கட்டில் புனித கயிறைக் கட்டி, உப்பிய வயிற்றுப் பகுதியில் சிறிது விபூதியை தடவினார். கொஞ்சம் விபூதியை அவரது வாயில் இட்டார்.
இது நடந்த ஐந்து நிமிடத்தில் உப்பியிருந்த வயிறு மீண்டும் சகஜ நிலைக்கு வந்து விட்டது. அந்தப் பெண் சீராக கவாசிக்கத் தொடங்கினாள். சாய் பாபா மீது நம்பிக்கை வைத்து சரணாகதி அடைந்தவரை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். அவரது விபூதியே மருந்தாக விளங்கும் என்பதை எல்லோரும் உணர்ந்தார்கள்.