என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நடக்கும் கந்த சஷ்டி விழா தேரோட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நடக்கும் கந்த சஷ்டி விழா தேரோட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/07/09/1912380-sikkal-singaravelan-temple-kantha-sasti-therottam.webp)
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நடக்கும் கந்த சஷ்டி விழா தேரோட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
- ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா நடைபெறும்.
நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவில் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றாகும். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சிங்காராவேலவரை தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதில் கந்தசஷ்டி விழா தேரோட்டமும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா நடைபெறும். விழாவின் 5-ம் நாள் தேரோட்டம் நடக்கும். அன்றைய தினம் சிறப்பு அலங்காரத்தில் முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளுவார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கப்படும்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து செல்வர். நான்கு வீதிகள் வழியாக தேர் வலம் வந்து நிலையை வந்தடையும். தேர் அசைந்தாடி வரும் காட்சி பிரமிப்பாக இருக்கும்.தேரோட்டத்தை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சிக்கல் கிராமத்தில் குவிவார்கள்.
அதன்படி இந்த ஆண்டும் கந்தசஷ்டி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.