என் மலர்
வழிபாடு

சீனிவாச கல்யாண உற்சவம்
- மாங்கல்ய தாரணம், வாரணமாயிரம் மற்றும் ஆரத்தி நடந்தது.
- பலர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடப்பா மாவட்டம் புரதட்டூரில் உள்ள 2-டவுன் போலீஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் சீனிவாச கல்யாண உற்சவம் நடந்தது. ஏழுமலையான் கோவிலின் தலைமை அர்ச்சகர்களில் ஒருவரான கிருஷ்ண சேஷாசல தீட்சிதர் தலைமையில் அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் அடங்கிய குழு சீனிவாச கல்யாணத்தை நடத்தியது. அதில் புண்யாஹவச்சனம், விஸ்வக்சேன ஆராதனை, அங்குரார்ப்பணம், மஹா சங்கல்பம், கன்யாதானம், மாங்கல்ய தாரணம், வாரணமாயிரம் மற்றும் ஆரத்தி நடந்தது.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. சிவபிரசாத்ரெட்டி, தேவஸ்தான அறக்காவலர் குழு உறுப்பினர் மாருதிபிரசாத், பறக்கும்படை அதிகாரி பாலிரெட்டி, சுவேத பவன் இயக்குனர் பிரசாந்தி, கல்யாண திட்ட உதவி அதிகாரி ராமுலு, கண்காணிப்பாளர் கிராந்திகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






