search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காவிரித்தாய் ரதத்திற்கு ஸ்ரீரங்கத்தில் வரவேற்பு
    X

    காவிரித்தாய் ரதத்திற்கு ஸ்ரீரங்கத்தில் வரவேற்பு

    • காவிரித்தாய்க்கு மகா ஆரத்தி நடந்தது.
    • காவிரி தாய் உருவ சிலைக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    அகிலபாரதிய சன்னியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை உள்ளிட்ட நதிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆன்மிக சேவை அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தில் புனித நதியான காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகுமாவட்டம் தலைக்காவிரியில் தொடங்கி காவிரியாறு வங்கக்கடலில் கலக்கும் பூம்புகார் வரை நதிநீரின் புனிதத்தை பாதுகாக்கவும், நதி நீர் மாசுபடாமல் பாதுகாக்கவும் வலியுறுத்தி சிறப்பு ரதயாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வகையில் 12-ம் ஆண்டு ரதயாத்திரை குடகுமலையில் அகிலபாரதிய சன்னியாசிகள் சங்க துணைத்தலைவர் சுவாமி ராமானந்தா மகராஜ் தலைமையில் கடந்த 21-ந் தேதி தொடங்கியது. இந்த ரதயாத்திரை கடந்த 24-ந் தேதி ஒகனேக்கல் பகுதியில் தமிழக எல்லைப்பகுதிக்கு வந்தது. அங்கிருந்து காவிரிக்கரையோர புனித தீர்த்தத் தலங்களில் ரதத்தில் வரும் காவிரித்தாய் சிலைக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தி, அந்தந்த பகுதிகளில் காவிரியாற்றுக்கு மகாஆரத்தி காட்டப்பட்டு வருகிறது.

    இவ்வகையில் நேற்று மாலை ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்திற்கு வந்த காவிரி ரதயாத்திரைக்கு விஷ்வ இந்து பரிஷத், உள்ளூர் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ரதயாத்திரையில் வந்த விநாயகர், அகஸ்தியர், காவிரித்தாய் சிலைக்கு அம்மாமண்டபம் படித்துறை காவிரியில் துறவியர் மற்றும் சன்னியாசிகள் அபிஷேக, ஆராதனையுடன் கூட்டுவழிபாடு நடத்தினர்.

    தொடர்ந்து காவிரித்தாய்க்கு மகா ஆரத்தி நடந்தது. நிகழ்ச்சிகளில் சன்னியாசிகள் சங்க இணைச்செயலாளர் சிவராமானந்தா, ரதயாத்திரை ஒருங்கிணைப்பாளர் கோரக்கானந்தா, தமிழ்நாடு ரதயாத்திரை தலைவர்மேகானந்தா, விஷ்வ இந்து பரிஷத் தென்தமிழ்நாடு அமைப்பு செயலாளர் சேதுராமன், மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், பா.ஜனதா மாவட்ட ஆன்மிக பிரிவு தீப்பு, திருவேங்கடயாதவ் உள்பட பல்வேறு ஆன்மிக சேவை அமைப்புகளைச் சேர்ந்த துறவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த காவிரி ரதயாத்திரை கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம் வழியாக வருகிற 10-ந் தேதி பூம்புகாரில் நிறைவடையும் என்று நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

    முன்னதாக பெட்டவாய்த்தலை வந்த காவிரி யாத்திரைக்கு ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். காவிரி தாய் உருவ சிலைக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து காவல்காரபாளையம், திருப்பராய்த்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

    Next Story
    ×