என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
புனல்வாசல் புனித சவேரியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- திருவிழா வருகிற 3-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
- வரும் 2-ந்தேதி தேர் பவனி நடைபெற உள்ளது.
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தஞ்சாவூர் மங்களபுரம் புனித லூர்து அன்னை ஆலய பங்கு தந்தை மரிய சூசை கொடியேற்ற விழாவில் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுகிறார். இன்று மாலை தொடங்கும் திருவிழா, வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் மாலை 6.15 மணிக்கு செபமாலை, சவேரியார் நவநாள் ஜெபம், திருப்பலி, மறையுரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
வரும் 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை கூட்டு பாடல் திருவிழா திருப்பலியும், அன்று இரவு 10 மணிக்கு தேர் பவனியும் நடைபெற உள்ளது. 3-ந்தேதி திருப்பலியை தொடர்ந்து, மாலை 4 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெற உள்ளது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தையும் புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி தாளாளருமான ஜான்சன் எட்வர்ட், உதவி பங்குத்தந்தை அற்புத சந்தியாகு, அருட் சகோதரிகள் மற்றும் புனல் வாசல் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.