search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடக்கிறது
    X

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடக்கிறது

    • இந்த காட்சி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இங்கு நடக்கிறது.
    • இக்காட்சியைக் காண திரளான பக்தர்கள் இன்று இரவு சுசீந்திரத்தில் கூடுவர்.

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, அலங்கார தீபாராதனை, பக்தி இன்னிசை, பக்தி மெல்லிசை, பரதநாட்டியம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவின் 3-ம் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி வீதி உலா காட்சியும், இரவு 11 மணிக்கு சாமி கற்பக விருட்ச வாகனத்தில் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது வடக்கு தெருவில் கொட்டாரம் வாசலில் வைத்து கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை முருகன் ஆகிய மூவரும் தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் விழாவை காண வருகின்றனர்.

    உமா மகேஸ்வரர், விஷ்ணு, அம்பாள் ஆகியோர் அமர்ந்திருக்கும் வாகனங்களை விநாயகரும், சுப்ரமணியரும் மூன்று முறை சுற்றி வலம் வந்து ஆசி பெறுவார்கள். பின்னர் இரு புறமாக கிழக்கே பார்த்து அனைவரும் சேர்ந்து நின்று பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். அப்போது தீபாராதனை நடைபெறும். இந்த காட்சி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இங்கு நடக்கிறது. இந்த தரிசனத்தை "மக்கள் மார் சந்திப்பு" என்றும் "மக்கள் மார் சுற்று" என்றும் கூறுவர்.

    இக்காட்சியைக் காண திரளான பக்தர்கள் இன்று இரவு சுசீந்திரத்தில் கூடுவர். பின்னர் 7 நாட்கள் விநாயகரும், சுப்பிரமணியரும் தாய் தந்தையரின் திருத்தலத்தில் தங்கி அவர்களோடு விதவிதமான வாகனங்களில் வீதியுலா வருவார்கள். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

    Next Story
    ×