search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வேண்டும் வரம் தரும் மகாமாரியம்மன் சுந்தர காளியம்மன்
    X

    வேண்டும் வரம் தரும் மகாமாரியம்மன் சுந்தர காளியம்மன்

    • மாம்பழ அபிஷேகம் செய்தால், குழந்தை பாக்கியம் கிட்டும்.
    • மாதுளம்பழ அபிஷேகம் செய்தால், கோபம் தீரும்.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூரில் மகா மாரியம்மன், சுந்தர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வேண்டும் வரம் தரும் மகாமாரியம்மன், சுந்தர காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த மகா சுந்தரகாளி அம்மனை வழிபடும்போது, பழங்களால் அபிஷேகம் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும். வாழைப்பழ அபிஷேகம் செய்தால், சாகுபடி செய்த பயிர்கள் நல்ல மகசூல் தரும். பலாப்பழ அபிஷேகம் செய்தால், நினைத்தது நடக்கும்.

    மாம்பழ அபிஷேகம் செய்தால், குழந்தை பாக்கியம் கிட்டும். மாதுளம்பழ அபிஷேகம் செய்தால், கோபம் தீரும். எலுமிச்சம்பழம் அபிஷேகம் செய்தால், பகைவர் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை. எங்கும் நிறைந்த பரம்பொருளை, தீபச் சுடராகக் கண்டு வழிபடுவதால், வாழ்வில் துன்ப இருளை அகற்றி இன்ப ஒளி ஏற்றலாம்" என்பது சான்றோர் கருத்துப்படி நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பமுடன் மகா சுந்தரகாளி அம்மன் அருள் புரிவாள் என்பது நம்பிக்கை.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் அதி விமரிசையாக மகா மாரியம்மனுக்கு தீமிதி திருவிழா மற்றும் சுந்தர காளியம்மன் திரு நடன விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்காக திருவிழா கடந்த மார்ச் 23-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருபுவனம் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து சக்தி கரகம் வீதி உலாவாக கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெற்றது. 28-ந்தேதி இரண்டாம் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய விழா தினசரி இரவு அம்பாள்கள் வீதி உலா விமரிசையாக நடைபெற்று வந்தது. இன்று(திங்கட்கிழமை) மாலை மகா மாரியம்மனுக்கு தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது.

    முன்னதாக கோவி்லில் இருந்து மகாமாரியம்மன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வீதியுலா புறப்படுகிறது. தேப்பெருமாநல்லூர் வீதிகள் தோறும் வழி நெடுக அர்ச்சனைகள் நடைபெறுகிறது. பின்னர் அம்பாள் கோவில் திரும்பியதும் தீமிதி திருவிழா நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கர்.

    காலை முதலே பெண்கள் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வார்கள். வருகிற 5-ந்தேதி கோவி்லில் இருந்து சுந்தர காளியம்மன் புறப்பட்டு திருநடன விழா நடைபெறுகிறது. 9-ந்தேதி அம்பாள் வீதி உலா முடிந்து கோவிலுக்கு திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு உதவி ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள், கிராம கமிட்டியினர், ஊர் நாட்டான்மைகள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×