என் மலர்
வழிபாடு

சுவாமிமலை சாமிநாதசாமி கோவிலில் சேவா கட்டணங்கள் உயர்வு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
- இதுவரை பக்தர்கள் செலுத்தி வந்த சேவா கட்டணங்களை 100 சதவீதம் உயர்த்தியுள்ளது.
- இந்த கட்டண உயர்வு கடந்த 7 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாமிமலை சாமிநாதசாமி கோவிலில் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தங்கரத புறப்பாடு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் சேவா கட்டணம் செலுத்தி தரிசனம் செய்து தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். இதுவரை பக்தர்கள் செலுத்தி வந்த சேவா கட்டணங்களை 100 சதவீதம் உயர்த்தி நேற்று முதல் அமலுக்கு வருவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ரூ. 1500 செலுத்தி செய்யப்பட்ட அபிஷேக கட்டணம் தற்போது ரூ.3000 ஆகவும், சண்முகார்ச்சனை கட்டணம் ரூ.3000-ல் இருந்து ரூ. 6000 ஆகவும், திரிசதை கட்டணம் ரூ.3000-ல் இருந்து ரூ. 6000 ஆகவும், சந்தன காப்பு அலங்காரம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும், சுற்றுக்கோவில் அபிஷேக கட்டணம் ரூ. 300-ல் இருந்து ரூ.600 ஆகவும், தங்கரத புறப்பாடு கட்டணம் ரூ.1201-ல் இருந்து ரூ.2000 ஆகவும், சகஸ்ரநாமம் ரூ.100-ல் இருந்து ரூ.1000 ஆகவும், முத்தங்கி ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆகவும், உபநயன கட்டணம் 500-ல் இருந்து ரூ.1000 ஆகவும், காது குத்துதல் கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.500 ஆகவும், சிறப்பு வழி கட்டணம் ரூ.50-ல் இருந்து விசேஷ காலகட்டங்களில் மட்டும் ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு கடந்த 7 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






