என் மலர்
வழிபாடு
வருடத்தில் 6 மாதம் மட்டுமே திறந்திருக்கும் ஆலயம்
- இந்தியாவின் 4 புனிதமான தலங்களில் பத்ரிநாத் திருத்தலமும் ஒன்று.
- கோவிலுக்குள் நுழையும் முன்பாக, சுடுநீரில் நீராடுவது வழக்கம்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அலக்நந்தா நதிக்கரையில் அமைந்துள்ளது பத்ரிநாத். இந்தியாவின் மிகவும் புனிதமான யாத்திரை தலங்களில் இது முக்கியமானதாக போற்றப்படுகிறது. இந்த இடத்தில் பத்ரி நாராயணன் என்ற பெயரில் இறைவன் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.
`சார் தாம்' என்று அழைக்கப்படும் இந்தியாவின் 4 புனிதமான தலங்களில் இந்த பத்ரிநாத் திருத்தலமும் ஒன்று. பத்ரிநாத் கோவிலின் மிகவும் சுவாரசியமான அம்சங்களில் ஒன்று. அங்குள்ள வெந்நீர் ஊற்று. இதனை தப்ட் குண்ட் என்பார்கள்.
இது மருத்துவ குணம் கொண்டதாக நம்பப்படுகிறது. அதோடு பக்தர்களால், புனிதமானதாக போற்றப்படுகிறது. பக்தர்கள் பத்ரிநாத் கோவிலுக்குள் நுழையும் முன்பாக, இந்த சுடுநீரில் நீராடுவது வழக்கம்.
பத்ரிநாத் கோவில் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கே மகாவிஷ்ணு வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.
இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இந்த ஆலயம். ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறந்து வைக்கப்படும்.