என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
மதுரையில் சைவ மதத்தை பரப்பிய திருஞானசம்பந்தர்
- திருஞானசம்பந்தர் போட்ட ஏடு ஆற்று நீரை எதிர்த்து சென்றது.
- சமணர்களின் ஏடு தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டது.
மதுரையை கூன்பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி புரிந்தபோது சமண மதம் தான் பெரியது என கூறப்பட்டது. இதனை பொய்யாக்க திருஞானசம்பந்தரை சைவ மதத்தினர் மதுரைக்கு அழைத்து வந்தனர்.அவர் வந்து அமர்ந்த இடம் தான் தற்போதைய மதுரை ஆதீனம் மடம். திருஞானசம்பந்தரின் லீலைகளை கேள்விப்பட்ட சமணர்கள் அவர் இருந்த வீட்டிற்கு தீ வைத்தனர். ஆனால் அவர் அதில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவர் பையவே சென்று பாண்டியனை பற்றட்டும் என கூறினார்.
இதன் காரணமாக கூன்பாண்டியனுக்கு தொழுநோய் மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டது. இதனை குணப்படுத்த பல்வேறு மருத்துவம் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் திருஞானசம்பந்தரை வரவழைத்து கேட்டனர். அவர் திருநீரை எடுத்துக் கொடுத்தார். அதனை சாப்பிட்டதும் கூன் பாண்டியனின் நோய் குணமானது. ஆனால் இதனை சமணர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
அதன் பிறகும் வாதங்கள் எழுந்தன. தொடர்ந்து சமணர்களின் புத்தகங்களை தீயில் கொண்டு வந்து போட்டனர். அவை எரிந்து சேதமானது. ஆனால் திருஞானசம்பந்தர் தான் எழுதிய "திருநள்ளாற்று பதிகத்தை" தீயில் போட்டார். அது எரியாமல் நின்றது. இதனால் பச்சை பதிகம் என பெயர் பெற்றது.
தொடர்ந்து புனல்வாதம் நடத்த சமணர்கள் அழைப்பு விடுத்தனர். அதன்படி வைகையாற்றில் இருதரப்பு ஏடுகளையும் தண்ணீரில் போட வேண்டும். எந்த ஏடு எதிர்த்து வருகிறது? என்பதை வைத்து முடிவு செய்ய திட்டமிடப்பட்டது.
அப்போது பாண்டியன் அரசவையில் மந்திரியாக இருந்த குலச்சாடனார் 2 முறை தோற்றுவிட்ட சமணர்கள் இந்த முறை தோற்றால் கழுவேறி உயிர் நீக்க வேண்டும் என கூறினார். இதனை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு ஏடுகள் வைகையாற்றில் போடப்பட்டன.திருஞானசம்பந்தர் போட்ட ஏடு ஆற்று நீரை எதிர்த்து சென்றது. ஆனால் சமணர்களின் ஏடு தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் இந்து மதம் சிறந்தது என முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு சமணர்கள் சிலர் தாங்களாகவே கழுவேறி உயிர் நீத்துக் கொண்டனர். இன்னும் சிலர் தப்பி ஓடி விட்டனர். எனவே மதுரையில் இந்து மதத்தை தழைத்தோங்கச் செய்த திருஞானசம்பந்தரை நினைவு கூறும் வகையில் தான் அவருக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் குருபூஜை நடத்தப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்