search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில் பக்தர்கள் மொட்டையடிக்கும் இடம் மாற்றம்
    X

    பக்தர்கள் வரிசையில் செல்வதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில் பக்தர்கள் மொட்டையடிக்கும் இடம் மாற்றம்

    • ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்க தனித்தனியாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
    • வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். புரட்டாசி மாதம் பிறந்ததையடுத்து கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்களும், 3-வது சனிக்கிழமை அன்று 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களின் வசதிக்காக கோவிலில் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் வகையில் கழியால் தடுப்புகள் அமைக்கப்படுகிறது. மேலும் வழக்கமாக கோவில் பின்புறம் உள்ள கூடத்தில் பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் மொட்டையடிப்பார்கள் என்பதால் பக்தர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே மொட்டையடிக்கும் இடம் மாற்றப்பட்டுள்ளது.

    அதாவது சாலக்கரை இலுப்பை தோப்பில் பக்தர்கள் மொட்டையடிக்க கூடாரமும், ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்க தனித்தனியாக கட்டிடமும் கட்டப்பட்டு வருகிறது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்காக சாலக்கரையிலேயே இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×