என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/25/1826335-thiruchanur.webp)
X
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
By
மாலை மலர்25 Jan 2023 12:25 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- திருச்சானூர் கோவிலில் வருகிற 28-ந்தேதி ரதசப்தமி நடக்கிறது.
- புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 28-ந் தேதி ரதசப்தமி நடக்கிறது. இதனை முன்னிட்டு கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நேற்று நடைபெற்றது. அதிகாலையில் தாயார் சுப்ரபாதத்தில் எழுந்தருளி சஹஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.
அதன்பின்னர் காலை 6.30 மணி முதல் 9 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீர் கொண்டு சுத்திகரிக்கப்பட்டன. அதன்பின், நாமகோபு, ஸ்ரீசூர்ணம் மற்றும் பல்வேறு சுகந்தவாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
இதன் காரணமாக கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டது.
Next Story
×
X