என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் மூலவர் கோபுரத்துக்கு தங்க முலாம் பூசும் பணி
- பஞ்சலோக பொருட்கள் வைக்கும் பிரிவையும் ஆய்வு செய்தார்.
- கோவிலில் மூலவர் கோபுரம் தங்க முலாம் பூசும் பணிக்காக 50 தங்க நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் உள்ள தேவஸ்தான தங்க நகைகள் பிரிவையும், கோவிலில் தற்போது நடந்து வரும் மூலவர் கோபுரத்துக்கு தங்க முலாம் பூசும் பணிகளையும் தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவிலில் மூலவர் கோபுரம் தங்க முலாம் பூசும் பணிக்காக 50 தங்க நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, கோவில் அதிகாாிகள் இணை அதிகாரியிடம் தெரிவித்தனர்.
அந்தப் பணிகளை விரைவுபடுத்த கோவிலில் உள்ள அலுவலகங்களை மாற்றி, பொற்கொல்லர்களுக்கு தேவையான 5 பட்டறைகளை ஏற்பாடு செய்யுமாறு இணை அதிகாரியிடம் கோவில் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
அப்போது பொற்கொல்லர்களுடன் உரையாடிய இணை அதிகாரி வீரபிரம்மன், தெய்வீகப் பணியை முழு ஈடுபாட்டுடன் முடிக்குமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்.
அத்துடன் கோவிந்தராஜசாமி கோவில் மூலவர் கோபுரத்தில் தங்க முலாம் பூசும் பணிகளை விரைவுபடுத்தவும், திட்டமிட்டபடி பணிகளை போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்தி முடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இணை அதிகாரி உத்தரவிட்டார்.
பின்னர் தேவஸ்தானத்தின் பழைய ஹுசூர் அலுவலக வளாகத்தில் காலியாக உள்ள அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, செப்புத் தகடுகள், வெண்கலம் போன்றவற்றைப் பொற்கொல்லர்கள் வைக்கும் அறைகளாகப் பழுதுப்பார்த்து பயன்படுத்த கோவில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பழுதான பொருட்களை அகற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து பஞ்சலோக பொருட்கள் வைக்கும் பிரிவையும் ஆய்வு செய்தார். அந்த அறையை சரியான காற்றோட்டத்துடன் விசாலமானதாக அமைக்க பொறியியல் துறை அதிகாரிகளுக்கு இணை அதிகாரி உத்தரவிட்டார்.
ஆய்வின்போது நிதித்துறை அதிகாரி பாலாஜி, என்ஜினீயர்கள் நாகேஸ்வரராவ், வேணுகோபால், கோவில் உதவி அதிகாரி சுப்பராஜு மற்றும் பலர் உடனிருந்தனர்.