என் மலர்
வழிபாடு
X
திருமலை வைபவ மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம்
Byமாலை மலர்14 Nov 2022 12:57 PM IST
- உணவுப் பொருட்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
- ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம் நடக்க இருந்தது. தற்போது பெய்து வரும் மழையால் பார்வேடு மண்டபத்தில் நடக்க இருந்த உற்சவத்தை ரத்து செய்து விட்டு நேற்று கோவிலில் உள்ள வைபவ மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம் நடத்தப்பட்டது.
அதையொட்டி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை வைபவ மண்டபத்துக்கு கொண்டு வந்து எழுந்தருள செய்தனர். அங்கு உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், இளநீர், பன்னீர், தேன் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்வித்தனர். உற்சவர்களுக்கு நைவேத்தியம் செய்த உணவுப் பொருட்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
உற்சவத்தில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கோவிலில் நடக்கும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
Next Story
×
X