என் மலர்
வழிபாடு
சிவலிங்க வகைகளும்... வழிபட்டால் கிடைக்கும் பலன்களும்...
- பல்வேறு வகையான சிவலிங்கங்கள் உள்ளன.
- எந்த லிங்கத்தை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
புற்று மண் லிங்கம் - மோட்சம் தரும்
ஆற்றுமணல் லிங்கம் - பூமி லாபத்தைத் தரும்
பச்சரிசி லிங்கம் - திரவிய லாபமும்,
அன்னலிங்கம் - அன்ன விருத்தியையும் தரும்
கோமய லிங்கம் - வியாதியைத் தீர்க்கும்
வெண்ணெய் லிங்கம் - மனமகிழ்ச்சி தரும்
ருத்ராட்ச லிங்கம் - ஞான விருத்தி தரும்
விபூதிலிங்கம் - சகலசவுபாக்கியத்தையும் தரும்
சந்தன லிங்கம் - சகல இன்பத்தைத் தரும்
புஷ்ப லிங்கம் - ஆயுள் விருத்தி கொடுக்கும்
சர்க்கரை லிங்கம் - விரும்பிய இன்பங்களைத் தரும்
மாவு லிங்கம் - உடல் வலிமை தரும்
பழ லிங்கம் - சுகத்தைத் தரும்
தயிர் லிங்கம் - நல்ல குணத்தைத் தரும்
தண்ணீர் லிங்கம் - சகல மேன்மைகளையும் தரும்.
தர்ப்பைப் புல் லிங்கம் - லட்சுமி கடாட்சம்
களிமண் லிங்கம்- மனச்சாந்தி
பசுஞ்சாண லிங்கம் -ஆரோக்யம்
லிங்கத்தில் பிற தெய்வங்கள்
சிவ லிங்கத்தில் ஆரம்ப நாள்களில் சிவனுடைய முகத்தை மட்டுமே அமைப்பதென்பது கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் பின்னாளில் வந்தவர்கள் தங்கள் மனதிற்கேற்ப விநாயகர், முருகர் ஆகியோரையும் கூட சிவ லிங்கத்தில் அமைக்கத் தொடங்கிவிட்டனர். திருவானைக்கா கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் உள்ள 108 லிங்கங்களில் ஒரு லிங்கத்தில் விநாயகப் பெருமானையும் ஒரு லிங்கத்தில் முருகப்பெருமானையும் அமைந்திருக்கிறார்கள்.
சிதம்பர ரகசியம்
சிதம்பர ரகசியம் என்றால் ஒன்றுமில்லை என்று அர்த்தம். பஞ்ச பூதங்களுள் ஒன்றான ஆகாய லிங்கமாக இறைவன் அந்தத் தலத்தில் குடி கொண்டிருக்கிறார்.
ஆகாயம் எப்படி உருவமற்றதோ அதே போல அந்த லிங்கமும் உருவமில்லாமல் இருக்கிறது. அதாவது ஒன்றுமில்லாதது. இதைத்தான் சிதம்பர ரகசியம் என்கிறார்கள்.
ஊமத்தம் பூ பூஜை
எல்லோராலும் ஏற்கப்படாத ஊமத்தம் பூவை தனது பூஜைக்கு உகந்ததாகக் கொள்ளும் கருணைக் கடல் சிவபெருமான். அதிலும் குறிப்பாக ஸ்ரீ அக்னீஸ்வரரை ஊமத்தம் பூ கொண்டு வழிபடுகிறவர்களுக்கு மனக் கவலைகள் தீரும். பில்லி, சூனியங்கள் அகலும், சித்தம் தெளியும்.