search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வெள்ளிக்கிழமை எந்தெந்த கடவுளுக்கு எந்தெந்த மந்திரம் சொல்லலாம்....
    X

    வெள்ளிக்கிழமை எந்தெந்த கடவுளுக்கு எந்தெந்த மந்திரம் சொல்லலாம்....

    • திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்
    • சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய் வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்

    வெள்ளிக்கிழமை அன்று நாம் விசேஷமாக தெய்வங்களை வழிபடுவது வழக்கம். அப்படி நாம் வழிபடும் போது நாம் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள், ஸ்லோகங்கள் என்ன என்று பார்க்கலாம்...

    ஆன்மிகத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பட்ட தெய்வங்களை விசேஷமாக வழிபடுவது வழக்கம். இருப்பினும் நாம் தினமும் அனைத்து தெய்வங்களுக்கான மந்திரங்களை சொல்லி வழிபட அன்றை நாள் கூடுதல் விசேஷமாகும்.

    விநாயகர்

    ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி

    தந்நோ தந்தி ப்ரசோதயாத்

    சிவன்

    மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

    சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு

    தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு

    செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே

    அம்பாள்

    கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர்

    கபடு வாராத நட்பும்

    கன்றாத வளமையும், குன்றாத இளமையும்,

    கழுபிணி இலாத உடலும்

    சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,

    தவறாத சந்தானமும்,

    தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்,

    தடைகள் வாராத கொடையும்,

    தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு

    துன்பம் இல்லாத வாழ்வும்

    துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய

    தொண்டரொடு கூட்டு கண்டாய்,

    அலை ஆழி அறிதுயிலும் மாயனது தங்கையே,

    ஆதி கடவூரின் வாழ்வே,

    அமுத ஈசர் ஒரு பாகம் அகலாத சுக பாணி

    அருள்வாய் அபிராமியே!

    விஷ்ணு

    திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்

    அருக்கன் அணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்

    பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்

    என்னாழி வண்ணன்பால் இன்று.

    முருகன்

    நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடி வந்த

    கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு

    தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்

    தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.


    நவகிரகம் : வெள்ளி/சுக்ரன்

    சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய்

    வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்

    வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே

    அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே.

    Next Story
    ×