search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு 3 ஆசனங்கள்
    X

    தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு 3 ஆசனங்கள்

    • தூக்கம் இல்லாமல் இருந்தால் இருதய நோய் பாதிப்பு அபாயம்.
    • ஆசனம் மன நலம் தரவல்லதாக அறியப்படுகிறது.

    நல்ல தூக்கம் முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. நம்முடைய உடல் உட்படும்போது, தசை வளர்ச்சி, புரத உற்பத்தி மற்றும் தசை சீராக்கம் உள்ளிட்டவை முக்கியம். இந்த வகை தூக்கம் இல்லாமல் இருந்தால் இருதய நோய் பாதிப்பு அபாயம், களைப்பு அதிகமாகும். உடலுக்கு ஓய்வு அளிக்கும் நல்ல தூக்கத்தை வரவழைக்கும் இந்த யோகாசனங்கள் மூலம் பலன் பெறுங்கள்.

    சவாசனம்

    'சவ' என்றால் பிணம். ஆசனம் என்றால் இருக்கை. இந்த பயிற்சியில் பிணம் போல் படுத்திருப்பதால் 'சவாசனம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் மன நலம் தரவல்லதாக அறியப்படுகிறது. அமைதியான பகுதியைத் தெரிவு செய்து, யோகா பாய் விரித்து, அதன் மீது படுத்துக்கொள்ளவும். கால் பாதங்களை கொஞ்சம் அகலமாக வைத்துக்கொள்ளவும். அவை பக்கவாட்டில் இருக்கட்டும். கைகளையும் வரித்தபடி, உள்ளங்கால்கள் மேலே பார்த்தபடி இயல்பாக இருக்கட்டும். உடலின் மீது எந்த அழுத்தமும் வேண்டாம். கண்களை மூடியபடி மூச்சுவிடுவதில் கவனம் செலுத்தவும். அடிவயிற்றில் இருந்து சுவாசிக்கவும். மூச்சை உள்ளே இழுக்கும்போது 5 எண்ணவும். ஐந்து எண்ணியபடி மூச்சை வெளியே விடவும். நன்றாக உணரும் வரை இவ்வாறு செய்யவும்.

    பலன்கள்

    யோகா பயிற்சிகளால் உண்டாகும் களைப்பையும், உடல் வலியையும் போக்குகிறது. உடல் உறுப்புகள் ஓய்வு பெறுவதால் புத்துணர்வை அதிகரிக்கச் செய்கிறது. உடலெங்கும் ரத்த ஓட்டம் சீராக அமையும்.

    விபரீதகாரணி

    இந்த ஆசனத்துக்காக சுவரை பார்த்து, அப்படியே படுத்துக்கொள்ளவும். கால்களை உயர்த்தி, பின் பகுதி சுவர் மீது படும்படி வைத்திருக்கவும். பாதம் மேல் பக்கம் பார்த்திருக்கவேண்டும். 90 டிகிரியில் கால்களை வைத்திருக்க முடியும்போது இடுப்பு பகுதியை உயர்த்தி, கீழே குஷன் வைக்கவும். 5 நிமிடங்களுக்கு பின் பழைய நிலைக்கு வரவும்.

    பலன்கள்

    கால்களை மேலே தூக்கி செய்யப்படும் இந்த யோகாவில், வயிற்றுப்பகுதிகளில் உள்ள உறுப்புகள் நன்றாக செயற்படும். பசியினை தூண்டும். ரத்தத்தின் அடர்த்தி குறையும். ரத்த சம்பந்தமான நோய்களிலிருந்து பாதுகாக்கும். மன அமைதியை தரும்.

    பாலாசனம்

    'பாலபருவம்' என்றால் குழந்தைப் பருவம். குழந்தை முதலில் அமர்வதற்கு தேர்ந்தெடுக்கும் ஒரு ஆரோக்கியமான இருக்கை முறையை நம் ஆரோக்கியத்துக்கும் பயின்றுகொள்ள வலியுறுத்துவதால் இது 'பாலாசனம்" எனப்படுகிறது. காலை மடக்கிக்கொண்டு, குதிக்கால் மீது அமர்ந்துகொள்ளவும். மூச்சை உள்ளிழுத்தபடி, முழங்காலை அகலமாக விரிக்கவும். முன்னே குனிந்து, உடலை தொடைப்பகுதிக்கு இடையே வைத்து, மூச்சை இழுத்துவிடவும். முதுகை நிமிரச்செய்து, தலையை நன்றாக உயர்த்தி, கைகளை முன் வைத்து, முழங்கை மற்றும் முழங்கால் ஒரு கோட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். 30 வினாடிகள் இவ்வாறு இருந்து பழைய நிலைக்கு திரும்பவும்.

    பலன்கள்

    இது மன அழுத்தத்தை நீக்குகிறது தண்டுவட நரம்புகளுக்கு வலிமை கொடுக்கிறது. முதுகு வலியை குணப்படுத்துகிறது. உணவு செரிமானமாகும் திறனை அதிகரிக்கிறது. தொப்பையை நீக்குகிறது. வயிற்றுக் கோளாறுகளை போக்குகிறது. கால் முட்டி முதல் பாதம் வரை பலம் பெறுகிறது.

    Next Story
    ×