search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    நீண்ட ஆயுளுக்கான 5 ரகசியங்கள்!
    X

    நீண்ட ஆயுளுக்கான 5 ரகசியங்கள்!

    • நீண்ட ஆயுளுடன் வாழ்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
    • இயற்கையான சூழலில் வசிப்பவதற்கு விரும்புவார்கள்.

    உலகின் பல்வேறு பகுதிகளில் நீண்ட ஆயுளுடன் வாழ்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களின் ஆயுள் ரகசியம் குறித்து அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆராய்ச்சியாளர் டான் ப்யூட்னர் ஆய்வு செய்தார். ஜப்பானில் உள்ள ஒகினாவா தீவு, கிரீஸில் உள்ள இகாரியா தீவு, கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா நகரம், கோஸ்டாரிகாவில் உள்ள நிக்கோயன் தீபகற்பம், இத்தாலியில் உள்ள சர்டினியா நகரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அவர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் மருத்துவர்கள், மானுடவியலாளர்கள், தொற்றுநோயியல் நிபுணர்கள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இறுதியில் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு அவர்கள் பின்பற்றும் பொதுவான விஷயங்கள் கண்டறியப்பட்டது.

    நீண்ட காலம் வாழ்பவர்கள் இயற்கையுடன் நெருக்கமான தொடர்பை கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இயற்கையோடு இணைந்திருக்கும். இயற்கையான சூழலில் வசிப்பவதற்கு விரும்புவார்கள். அங்குதான் வசிக்கவும் செய்வார்கள்.

    100 வயதுக்கு மேல் வாழும் மனிதர்களைக் கொண்ட நாடுகளில் அவர்கள் என்ன ரகசியங்களை பின்பற்றுகிறார்கள் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க...

    தாவர உணவுகள்

    உலகில் நீண்டகால வாழ்வதற்கு அவர்கள் தாவரங்கள் சார்ந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகின்றனர். பீன்ஸ், கீரைகள், காய்கறிகள், கிழங்குகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நட்ஸ் வகைகள், பழங்கள் மற்றும் விதைகள் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதால் அவர்களது ஆயுள் நீடிப்பதாக கருதுகிறார்கள்.

    ஆட்டுப்பால்

    இந்த பகுதிகளில் வாழும் மக்கள் மாட்டுப்பால் மற்றும் மாட்டிறைச்சியை சாப்பிடுவதில்லை. அதற்கு பதிலாக செம்மறி ஆட்டுப்பால் குடிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் வாரத்திற்கு மூன்று முட்டை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    மீன்

    இங்குள்ள மக்கள் தினசரி உணவுகளில் மீன் உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். அதிலும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது மீன் உணவுகளை உண்கின்றனர்.

    பால் பொருட்களை தவிர்த்தல்

    மேலும் அவர்கள் பாலை குடிப்பதில்லை. குறிப்பாக பால் மற்றும் பால் பொருட்களான சீஸ், கிரீம், வெண்ணை, வெண்ணை சார்ந்த பொருட்கள் ஆகியவற்றை அவர்கள் சேர்த்துக்கொள்வதில்லை. தவிர்த்துவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பீன்ஸ்

    தினமும் குறைந்தது அரை கப் அளவிற்காவது வேகவைத்த பீன்ஸை எடுத்துக்கொள்கின்றனர். உலக சுகாதார நிறுவனமும் ஒரு மணிதன் தினமும் 20 கிராம் பீன்சையாவது எடுத்துக்கொள்வது, அவர்களை இறக்கும் அபாயங்களில் இருந்து 8 சதவீதம் குறைக்கிறது என்று தெரிவித்துள்ளது.

    100 வயதை கடந்தவர்கள் உட்கொள்ளும் அனைத்து உணவுகளும் 90 சதவீதம் வரை அவர்களின் வீட்டுக்கு 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வளரும். இதனால் உணவு சமைப்பது எளிது. கிழங்குகள், காய்கறிகள், தானியங்கள் ஆகியவற்றை உணவாக உட்கொள்ளுகின்றனர். தானியங்களை அரைத்து பின்னர் சமைத்து சாப்பிடுகின்றனர்.

    2002 முதல் அமெரிக்கர்கள் நீண்டகாலம் வாழ்ந்தவர்கள் இறைச்சி உணவுகளை தவிர்த்து சைவ உணவை மட்டுமே சாப்பிட்டவர்கள் என்று கணித்துள்ளது.

    Next Story
    ×