என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உடற்பயிற்சி
மன ஆரோக்கியத்திற்கு யோகா ஏன் முக்கியம் தெரியுமா?
- அன்றாட வாழ்வில் யோகா செய்வதை வழக்கமாக்க வேண்டும்.
- யோகா உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த உதவும்.
அன்றாட வாழ்வில் யோகா செய்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். யோகா செய்வதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த உதவும். இது உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகப்படுத்துவதுடன், மனதையும் உடலையும் வளர்ப்பதற்கான முழுமையான அணுகுமுறையாகவும் அமைகிறது. இனி மன ஆரோக்கியத்திற்கு யோகா எவ்வாறு உதவுகிறது என்பதை பார்க்கலாம்.
யோகா செய்வதால் மன அழுத்தம், பதட்டம், மன சோர்வு நீங்கி மன அமைதி கிடைக்கும். மேலும் ஹார்மோன் சமநிலை உணர்வு மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சுவாசம், கவனமான இயக்கத்துடன் பதற்றத்தை விடுத்து மனது தளர்வு நிலையை ஏற்படுத்த உதவுகிறது.
வழக்கமாக யோகா பயிற்சி செய்வது கவனத்தை கூர்மையாக்கி தெளிவான சிந்தனையை தருகிறது. இது மனக்கூர்மையையும், அறிவாற்றல் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. யோகாவின் அம்சம் கவனச்சிதறல்களை விடுத்து மனதை தெளிவாக்க உதவுகிறது. தினந்தோறும் யோகா செய்வது மனதை தெளிவடையச் செய்து சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க பெரிதும் உதவுகிறது.
தூக்கம்
தினமும் யோகா செய்வது ஆழ்ந்த தூக்கம் மற்றும் சீரான தூக்கத்தை ஊக்குவிக்கிறது. ஒட்டுமொத்த தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்துகிறது. இதற்கு யோகா நரம்புமண்டலத்தில் அமைதியான விளைவுகளை தருகிறது. இது உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்தி நல்ல இரவு தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.