search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    ஒரு நிமிடம் ஸ்கிப்பிங் செய்தால்..
    X

    ஒரு நிமிடம் 'ஸ்கிப்பிங்' செய்தால்..

    • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பயிற்சியை உடனே தொடங்கிவிடுங்கள்.
    • தினமும் கயிற்றில் குதித்து பயிற்சி பெறுவது எலும்புகளை வலுவடையச் செய்யும்.

    கயிற்றில் குதிப்பது பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் இது அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி வகையை சார்ந்ததாகும். கயிற்றை சுழலவிட்டு துள்ளி குதிக்கும் 'ஸ்கிப்பிங்' பயிற்சியை பலரும் குழந்தைகளுக்கான விளையாட்டாகவே பார்க்கிறார்கள். சிறந்த உடற்பயிற்சி வடிவங்களில் இதுவும் ஒன்றாகும். உடற்பயிற்சி மீது ஆர்வம் இல்லாதவர்கள் கூட தினமும் ஒரு நிமிடம் ஒதுக்கினால் போதும். ஜம்பிங் ரோப், ஸ்கிப்பிங் ரோப் என்று அழைக்கப்படும் இந்த கயிறு தாண்டி குதிக்கும் பயிற்சியை செய்துவந்தால் கிடைக்கும் நன்மைகள்:

    * இது சிறந்த கார்டியோ பயிற்சியாகும். உடல் உறுப்புகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும்.

    * கயிற்றில் குதிப்பது பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் இது அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி வகையை சார்ந்ததாகும். கயிற்றில் துள்ளி குதிப்பது இதயத்தை வலிமையாக்கும். இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

    * கயிற்றில் குதிப்பது மன நிலையை மேம்படுத்தும். கவனம் செலுத்தும் திறனை அதிகரிக்கச் செய்யும்.

    * ஸ்கிப்பிங் செய்வது உடலின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். விரைவாக சோர்வு எட்டிப்பார்க்கும் நிலையை மாற்றிவிடும்.

    * கவலை அல்லது மனச்சோர்வு அடையும் சமயத்தில் ஸ்கிப்பிங் பயிற்சி பெறலாம். அது உடல் நலனிலும், மன நலனிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

    * தினமும் கயிற்றில் குதித்து பயிற்சி பெறுவது எலும்புகளை வலுவடையச் செய்யும்.

    * இந்த பயிற்சியின்போது அதிக வியர்வை உற்பத்தியாகும். இதன் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். இதனால் சருமம் இயற்கையாகவே பொலிவு பெறும்.

    * உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பயிற்சியை உடனே தொடங்கிவிடுங்கள். இது மெட்டபாலிசத்தை துரிதப்படுத்தி தொப்பையை குறைக்கும்.

    Next Story
    ×