என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உடற்பயிற்சி
உடற்பயிற்சிக்கு முன் என்ன சாப்பிடலாம்...?
- ஊட்டச்சத்துக்கள் கலந்த சமச்சீர் உணவை உண்ணலாம்.
- போதிய ஊக்கம் அளித்து சோர்வில்லாமல் உடற்பயிற்சி செய்ய உதவும்.
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதைவிட, ஊட்டச்சத்துக்கள் கலந்த சமச்சீர் உணவை உட்கொண்டால் உடலின் செயல்திறன் மேம்படும். உடற்பயிற்சி செய்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாக வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சாப்பிடலாம். இவை உடலுக்கு போதிய ஊக்கம் அளித்து சோர்வில்லாமல் உடற்பயிற்சி செய்வதற்கு உதவும். எளிதில் செரிமானமாகக்கூடிய சிற்றுண்டியையும் சிறிதளவு சாப்பிடலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அவை உடலுக்கு அசவுகரியத்தை உண்டாக்கக்கூடும். இதனால் உடற்பயிற்சியின் செயல்திறன் பாதிக்கப்படும். எண்ணெய் தன்மை கொண்ட உணவுகளை சாப்பிட்டாலும் இத்தகைய பிரச்சினையை உண்டாகும். உடலில் நீர்ச்சத்தை பேணுவதும் அவசியமானது. அதனால் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் பருகலாம். தாகமாக இருந்து, அதிக தண்ணீர் பருகினால் உடனே உடற்பயிற்சி செய்யக்கூடாது.
உடற்பயிற்சிக்கு பிறகு சாப்பிட வேண்டியவை:
உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு பழங்கள், நட்ஸ் வகைகள், முழு தானியங்கள், முட்டை, கோதுமை பிரெட், சாண்ட்விச், தயிர், பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாம். அப்படி உடற்பயிற்சி செய்யும்போது உணவுகளின் மூலம் ஆற்றலை பெறுவதற்கு பதிலாக உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உடல் பயன்படுத்திக்கொள்ளும்.
அத்துடன் புரதங்களையும் பயன்படுத்திக்கொள்ளும். அதனை ஈடுசெய்வதற்கு ஊட்டச்சத்துமிக்க உணவை உட்கொள்வது அவசியமானது. கடினமான உடற்பயிற்சி செய்பவர்களை தவிர்த்து இலகுவான உடற்பயிற்சி செய்பவர்கள் சிறிதளவு சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு பயிற்சியை தொடங்குவது உடலுக்கு ஆரோக்கியமானது.