search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    கால்சியம் சத்து நிறைந்த அகத்திக்கீரை ரசம்
    X

    கால்சியம் சத்து நிறைந்த அகத்திக்கீரை ரசம்

    • பலவகை ரசங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம்.
    • அகத்திக்கீரை ரசம் சுவையிலும் மணத்திலும் தனித்துவம் மிக்கது.

    தேவையான பொருட்கள்

    அகத்திக்கீரை - 1 கட்டு

    சீரகம், தனியா - தலா 1 டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 3

    சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி

    தேங்காய் - 2 சில்லு

    புளி - எலுமிச்சை அளவு

    உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு

    கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை

    அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில் வேகவைத்து, தண்ணீரை வடிக்கவும்.

    சீரகம், தனியா, காய்ந்த மிளகாய், சின்னவெங்காயம், தேங்காய் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.

    புளியை சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்து கரைக்கவும்.

    வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

    வேகவைத்த கீரை, மசாலா விழுதைச் சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான சத்தான அகத்திக்கீரை ரசம் ரெடி.

    பெண்களுக்கு தாய்ப்பால் ஊற, இந்த ரசத்தைத்தான் கொடுப்பார்கள்.

    இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×