search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    பெங்காலி முட்டை தட்கா தால்
    X

    பெங்காலி முட்டை தட்கா தால்

    • சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பாசிப்பருப்பு - 1/2 கப்

    உளுத்தம் பருப்பு - 1/2 கப்

    கடலைப் பருப்பு - 1/2 கப் (நீரில் ஊற வைத்தது)

    வெங்காயம் - 2

    முட்டை - 2

    இஞ்சி - 1 இன்ச்

    பூண்டு - 6-8 பற்கள்

    தக்காளி - 1

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    வர மிளகாய் - 2

    பிரியாணி இலை - 2

    பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1 டீஸ்பூன்

    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

    கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    நெய் - 1 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

    சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    தக்காளி, 1 வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் மூன்று பருப்புக்களையும் நன்கு நீரில் அலசி போட்டு, தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கி,லேசாக கடைந்து கொள்ள வேண்டும்.

    இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, வர மிளகாய்,பச்சை மிளகாய் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி விட வேண்டும்.

    பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

    வெங்காயம் வதங்கியதும் வெங்காய பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.

    பிறகு தக்காளி, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் சீரகப் பொடி சேர்த்து, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.

    பின் அதில் வேக வைத்துள்ள பருப்புக்களை சேர்த்து கிளறி, சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

    மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து, நன்கு கிளறி இறக்கி விட வேண்டும்.

    இறுதியில் அந்த முட்டையை பருப்பில் சேர்த்து கிளறி இறக்கினால், முட்டை தட்கா தால் ரெடி!!!

    Next Story
    ×