search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சப்பாத்தி மீந்து விட்டதா? கவலைய விடுங்க.. சாண்ட்விச் செய்யலாம்...
    X

    சப்பாத்தி மீந்து விட்டதா? கவலைய விடுங்க.. சாண்ட்விச் செய்யலாம்...

    • வீட்டில் சப்பாத்திகள் மீதமாகிவிட்டால் சப்பாத்தி சாண்ட்விச் செய்யலாம்.
    • உணவகங்களில் வாங்கும் சாண்ட்விச்கள் கொழுப்பு, கலோரி மிக அதிகமாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி - 4

    சோளம் - 1/4 கப்

    முட்டைக்கோஸ் - 50 கிராம்

    சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி தூள் - 1/2 டீஸ்பூன்

    மயோனைஸ் - 2 தேக்கரண்டி

    வெண்ணெய் - 4 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    குடைமிளகாய் - 1

    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி

    சீஸ் - 4 துண்டுகள்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    கோஸ், குடைமிளகாய், வெங்காயத்தை பொடியாகநறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம், குடைமிளகாய் மற்றும் சோளம் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

    பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.

    கடைசியாக முட்டைக்கோஸ் சேர்த்து, இன்னும் இரண்டு நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

    இந்த காய்கறி கலவையில் தக்காளி சாஸ் மற்றும் மயோனைஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

    சப்பாத்தியை உங்கள் விருப்பப்படி வெட்டி ஒரு துண்டை எடுத்து அதில் காய்கறி கலவையை எடுத்து நிரப்பவும்.

    அதன் மீது சீஸ் சேர்த்து சப்பாத்தியை பாதியாக மடியுங்கள்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது வெண்ணெய் சேர்த்து உருகியதும் செய்து வைத்த சப்பாத்தி சாண்ட்விச்களை வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறிது பொன்னிறமாகும் வரை இருபுறமும் சமைத்து பரிமாறவும்.

    Next Story
    ×