search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    10 நிமிடத்தில் செய்யலாம் ஆம்லெட் சீஸ் சாண்ட்விச்
    X

    10 நிமிடத்தில் செய்யலாம் ஆம்லெட் சீஸ் சாண்ட்விச்

    • காலையில் ஆரோக்கியமான உணவிற்கு இந்த சாண்விச் சாப்பிடலாம்.
    • இந்த சாண்விச்சை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    ப.மிளகாய் - 1

    வெங்காயம் - 1

    முட்டை - 2

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    பிரெட் - 2

    சீஸ் ஸ்லைஸ் - 2

    சில்லி ஃபிளேக்ஸ் - விருப்பத்திற்கேற்ப

    வெண்ணெய் - விருப்பத்திற்கேற்ப

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    மிளகு தூள் - விருப்பத்திற்கேற்ப

    செய்முறை

    ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பிரெட்டின் மேல் சீஸ் ஸ்லைஸை வைத்து அதன் மேல் சில்லி ஃபிளேக்ஸ் தூவி மற்றொரு பிரெட்டால் மூடவும்.

    தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் பிரெட்டை வைத்து ஒரு புறம் ரோஸ்ட் ஆனதும் மறுபுறம் திருப்பி போட்டு சுற்றி வெண்ணெய் விட்டு இருபுறமும் டோஸ்ட் செய்யவும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை போட்டு அதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்த பின்னர் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து வைக்கவும்.

    இப்போது தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி முட்டை சற்று வெந்ததும் பிரெட்டை நடுவில் வைத்து முட்டையை அதன் மேல் மடித்து போட்டு பின்னர் திருப்பிபோட்டு வேக வைக்கவும்.

    முட்டை நன்றாக வெந்ததும் தவாவில் இருந்து இறக்கி இரண்டாக வெட்டி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான ஆம்லெட் சீஸ் சாண்ட்விச் ரெடி.

    Next Story
    ×