search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை
    X

    செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை

    • இதன் சுவை வாயில் வைத்ததும் கரைந்துவிடும்.
    • வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே மிகவும் எளியமுறையில் செய்துவிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    பாசிபருப்பு- 200 கிராம்

    ரவை- 100 கிராம்

    வெல்லம்-500 கிராம்

    தேங்காய்-அரை கப்

    ஏலக்காய்தூள்- ஒரு ஸ்பூன்

    நெய்- 100 கிராம்

    முந்திரி- அலங்கரிக்க

    செய்முறை:

    செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே மிகவும் எளியமுறையில் செய்துவிடலாம். இதன் சுவை வாயில் வைத்ததும் கரைந்துவிடும் அளவுக்கு இனிப்பு சுவையுடன் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஅனைவரும் மிகவும் விரும்பி சப்பிடுவர்.

    ஒரு காடாயில் வாணலிவைத்து காய்ந்ததும் 200 கிராம் பாசிபருப்பை சேர்த்து நன்றாக மணம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும் கருகிவிடக்கூடாது. இதனை ஒரு குக்கரில் வைத்து அதற்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு கழுவி அந்த பருப்பை தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். இப்போது வெல்லத்தை கரைத்து எடுத்துக்கொள்ளலாம். இதற்கு ஒரு அடிகனமான பாத்திரத்த்தை அடுப்பில் வைத்து வெல்லம் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு காய்ச்சி எடுக்க வேண்டும். ஒரு கப் பாசிபருப்புக்கு 3 கப் வெல்லம் என்ற அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இனிப்பு அதிகம் விரும்புபவர்கள் என்றால் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். பாகு கம்பிபதம் வர வேண்டாம். பாகு கரைந்து வந்தால் போதுமானது. வெல்லம் கரைந்து வந்தவுடன் இதனை ஒரு பாத்திரத்தில் தனியே எடுத்து வைக்க வேண்டும்.

    அதன்பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 3 கரண்டி நெய் சேர்க்க வேண்டும். இந்த உக்காரைக்கு சுவை சேர்க்கக்கூடியது இந்த நெய்தான். நெய் காய்ந்ததும் அதில் அரை கப் ரவை சேர்க்க வேண்டும். ரவையை பொன்னிறமாக நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் இதில் துருவி வைத்த தேங்காய் சேர்க்க வேண்டும். இதுவும் நன்றாக வறுத்து எடுக்க வேண்டும். நன்றாக வறுத்து எடுத்துக்கொண்டால் கெட்டுப்போகாமல் இருக்கும்.

    இந்த கலவையில் நாம் வேகவைத்துள்ள பாசிப்பருப்பு கலவையை சேர்க்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கலந்துவிடவேண்டும். அப்போது ரவை நன்றாக் வெந்துவரும். அப்போது நாம் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள வெல்லக் கரைசலை வடிகட்டியில் வடித்து சேர்க்க வேண்டும். வெல்லப்பாகு சேர்த்தவுடன் இந்த கலவையை நன்றாக கைவிடாமல் கலந்துகொண்டே வர வேண்டும். இதனுடன் நெய் சேர்க்க வேண்டும். கடைசியில் இதனுடன் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நெய் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும். சுவையான செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை தயார்.

    Next Story
    ×