search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    15 நிமிடத்தில் செய்யலாம் சிக்கன் மலாய் கட்லெட்
    X

    15 நிமிடத்தில் செய்யலாம் சிக்கன் மலாய் கட்லெட்

    • சிக்கனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 200 கிராம்

    உருளைக்கிழங்கு - 2

    ப.மிளகாய் - 2

    உப்பு - சுவைக்கு

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிதளவு

    மிளகு தூள் - அரை டீஸ்பூன்

    சில்லி பிளேக்ஸ் - அரை டீஸ்பூன்

    வெண்ணெய் - 1 டீஸ்பூன்

    மலாய் அல்லது கிரீம் - 2 டீஸ்பூன்

    பிரெட் தூள் - தேவையான அளவு

    முட்டை - 2

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி சிறிது உப்பு, சில்லி பிளேக்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    குக்கரில் சிக்கனை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து 1 விசில் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

    விசில் போனவுடன் குக்கரை திறந்து உருளைக்கிழங்கை எடுத்து விட்டு அதில் தண்ணீர் வற்றும் வரை சிக்கனை அடுப்பில் வைத்து வேக விடவும்.

    தண்ணீர் வற்றியதும் சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் உருளைக்கிழங்கை தோல் நீக்கி போட்டு மசிக்கவும்.

    அடுத்து அதில் மிளகு தூள், சில்லி பிளேக்ஸ், வெண்ணெய், மலாய் அல்லது கிரீம், உப்பு, கொத்தமல்லி,ப.மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும். இது சற்று தளர்வாக தான் இருக்கும்.

    ஒரு தட்டில் பிரெட் தூளை கொட்டி நன்றாக பரப்பி விடவும்.

    அப்போது சிக்கன் மசாலாவை சிறிது எடுத்து பிரெட் தூளில் போட்டு பிரட்டி வேண்டிய வடிவில் பிடிக்கவும். சிக்கன் மசாலா தளர்வாக இருக்கும் என்பதால் பிரெட் தூளில் பிரட்டினால் மட்டுமே சரியான வடிவில் வரும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    அடுத்து மற்றொரு முறை பிடித்து வைத்த கட்லெட்டை முட்டையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இதை மிதமான தீயில் வைத்து தான் செய்ய வேண்டும்.

    இப்போது சூப்பரான சிக்கன் மலாய் கட்லெட் ரெடி.

    Next Story
    ×