என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சமையல்
![ரமலான் ஸ்நாக்ஸ் சிக்கன் ஸ்டப்ஃடு உருளைக்கிழங்கு பிரை ரமலான் ஸ்நாக்ஸ் சிக்கன் ஸ்டப்ஃடு உருளைக்கிழங்கு பிரை](https://media.maalaimalar.com/h-upload/2023/03/30/1857966-snacks.webp)
ரமலான் ஸ்நாக்ஸ் சிக்கன் ஸ்டப்ஃடு உருளைக்கிழங்கு பிரை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இந்த ஸ்நாக்ஸ் செய்ய 20 நிமிடங்களே போதுமானது.
- இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - 1 டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா கொரகொரப்பாக பொடித்தது - 1 டீஸ்பூன்
சீரகத்தூள், கரம் மசாலா தூள், சிக்கன் டிக்கா மசாலா -தலா அரை டீஸ்பூன்
முட்டை - 1 (பாதி)
பிரெட் - 2 ஸ்லைஸ்
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - 3 பெரியது
சோளா மாவு - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்சி ஜாரில் சிக்கனை போட்டு அதனுடன், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, உப்பு, தனி மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், சிக்கன் டிக்கா மசாலா, கொரகொரப்பாக பொடித்த தனியா, பாதி முட்டை, பிரெட் துண்டுகள், எலுமிச்சை சாறு, சோயா சாஸ் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த மசாலா திக்கான பதத்தில் இருக்கும். கட்டியாக இருக்க வேண்டும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி விட்டு 1 1/2 இஞ்ச் அளவில் தடிமனாக வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்(படத்தில் உள்ளபடி). வெட்டிய உருளைக்கிழங்கின் நடுவில் பாதி அளவு வெட்டவும். இரண்டாக வெட்டி விடக்கூடாது. பாதிஅளவு மட்டுமே வெட்ட வேண்டும்.
உருளைக்கிழங்கின் மேல் சோளா மாவை போட்டு நன்றாக பிரட்டி விடவும்.
இப்போது அரைத்த மசாலவை சிறிது எடுத்து உருளைக்கிழங்கில் நடுவில் வைக்கவும். ஒரங்களில் வெளியில் வரக்கூடாது. இவ்வாறு அனைத்து உருளைக்கிழங்கிலும் வைக்கவும்.
அடுத்து கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த உருளைக்கிழங்கை போட்டு இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
இப்போது சூப்பரான சிக்கன் ஸ்டப்ஃடு உருளைக்கிழங்கு ரெடி.