என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சமையல்
![சுவையான மதிய உணவு கொத்தமல்லி புலாவ் சுவையான மதிய உணவு கொத்தமல்லி புலாவ்](https://media.maalaimalar.com/h-upload/2022/09/20/1764491-kothamalli-pulao.jpg)
சுவையான மதிய உணவு கொத்தமல்லி புலாவ்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பசியைத் தூண்டும் சக்தி கொத்தமல்லிக்கு உண்டு.
- கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் வாயு பிரச்சனை தீரும்.
தேவையான பொருட்கள்
தக்காளி - மூன்று
வெங்காயம் - இரண்டு
பாசுமதி அரிசி - இரண்டு கப்
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - எட்டு பல்
பச்சை மிளகாய் - ஐந்து
கொத்தமல்லி - ஒரு கட்டு
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - ஒன்று
லவங்கம் - ஒன்று
செய்முறை
தக்காளி, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி கொள்ளவும்.
சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லி, தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதை கழுவிய அரிசியில் போட்டு ஊறவைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அரைத்த விழுதில் ஊறவைத்த அரிசி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
மூன்று கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து ஒரு விசில் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.
இப்போது சூப்பரான கொத்தமல்லி புலாவ் ரெடி.