search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    மழைக்கு ஏற்ற இதமான தூதுவளை மிளகு ரசம்
    X

    மழைக்கு ஏற்ற இதமான தூதுவளை மிளகு ரசம்

    • கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள தூதுவளையை சேர்த்து நன்கு வதக்கவும்.
    • தூதுவளையை மிக்சியில் அரைத்து சேர்க்கவும்.

    தற்போது பருவநிலை மாறுபாடு காரணமாக பலரும் சளி, இருமல், காய்ச்சல், உடல் சோர்வு போன்ற காரணங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இந்த தூதுவளை மிளகு ரசம் கைகொடுக்கும். அதை எப்படி வைப்பது என்று பார்க்கலாமா....

    தேவையான பொருட்கள்:

    தூதுவளை - 1 கப்

    சின்ன வெங்காயம் - 10

    பூண்டு - 8 பல்

    மிளகு - 1 டீஸ்பூன்

    சிரகம் - 1 டீஸ்பூன்

    புளி - ஒரு நெல்லிகாய் அளவு

    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    வரமிளகாய் - 3

    கடுகு - 1/2 ஸ்ஸ்பூன்

    தக்காளி - 4

    க.எண்ணெய் - 2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    கொத்தமல்லி - ஒரு கைபிடி

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு வாணலியில் கடலை எண்ணெய் சேர்த்து, கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள தூதுவளையை சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி, கொதிக்கும்போது புளி கரைசலையும், அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து கலந்துவிடுங்கள். அதோடு மஞ்சள் தூள், இடித்த பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும்.

    பின்னர் தூதுவளையை மிக்சியில் அரைத்து சேர்க்கவும். இறுதியாக, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதை நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவும்.

    பின் தாளிக்க கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து பின் அதை அந்தக் கலவையில் கொட்டுங்கள். இறுதியாக மிளகு தூள், கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் ஆரோக்கியம் தரும், சளி, இருமலை, காய்ச்சல், உடல் சோர்வை துரத்தும் தூதுவளை மிளகு ரசம் தயார்.

    Next Story
    ×