search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    மாலை நேரத்தில் சாப்பிட அருமையான முட்டை போண்டா
    X

    மாலை நேரத்தில் சாப்பிட அருமையான முட்டை போண்டா

    • மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இது.
    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    முட்டையை நிரப்புவதற்கு

    முட்டை - 4

    எண்ணெய் - 3 தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 3

    உப்பு - 1/4 தேக்கரண்டி

    மிளகு - தேவைக்கு

    முட்டை மஞ்சள் கரு - 1

    கொத்துமல்லி தழை - சிறிதளவு

    மாவு தயாரிக்க

    கடலை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி

    உப்பு - 1/2 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    ஓமம் - 1/4 தேக்கரண்டி

    தண்ணீர்

    செய்முறை

    * வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முட்டையை வேக வைத்து கொள்ளவும். வெந்த முட்டையின் ஓடுகளை எடுத்து விட்டு முட்டையை இரண்டாக வெட்டி வைத்து மஞ்சள் கருவையும் வெள்ளை கருவையும் தனி தனியாக எடுத்து வைக்கவும்

    * முட்டையின் வெள்ளை கருவை நிரப்ப ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்தது வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகு தூள், முட்டையின் வேகவைத்த மஞ்சள் கரு, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    * தயாரான கலவையை முட்டையின் வெள்ளை கருவில் சேர்த்து வைக்கவும்

    * போண்டா மாவு தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு கரைத்து கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    * இப்போது சூடான மற்றும் சுவையான முட்டை போண்டா தயார்.

    Next Story
    ×