என் மலர்
சமையல்
ரோட்டுக்கடை ஸ்டைல் முட்டை மசாலா தோசை
- வீட்டில் முட்டை தோசை செய்து இருப்பீங்க.
- இன்று முட்டை மசாலா தோசை செய்யலாம் வாங்க...
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 1 கப்
முட்டை - 6
கடுகு - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மல்லி தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
½ tbsp மிளகு தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும கடுகு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும்.
அதன் பின் இதனுடன் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் முட்டைகளை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுப் பொடி சேர்த்து முட்டை உதிரி உதிரியாக வரும் வரை கிளறி விட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடாகியதும் இரண்டு கரண்டி மாவை எடுத்து தோசைகளாக ஊற்றி சற்று தடிமனாக ஊற்றவும்.
பின் அதன் மேல் முட்டை மசாலாவை சேர்த்து பின் அதற்கு மேல் பொடியாக நறுக்கி வெங்காயம், கொத்தமல்லி தூவி தோசை கரண்டியால் மெதுவாக அமிக்கி விட்ட பின் சுற்றி எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் சுவையான முட்டை மசாலா தோசை தயாராகி விட்டது.