search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    காரசாரமான பச்சை மிளகாய் சட்னி
    X

    காரசாரமான பச்சை மிளகாய் சட்னி

    • பச்சை மிளகாய் காரம்தான் என்றாலும் அதன் நன்மைகள் எண்ணற்றது.
    • தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள இது அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    பச்சை மிளகாய் - 20

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    உளுந்து - 2 டீஸ்பூன்

    பூண்டு - 10

    புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

    சமையல் எண்ணெய் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    கடுகு, கறிவேப்பிலை

    செய்முறை :

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை நன்றாக கழுவி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    பின் சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கியபின் இறக்குவதற்கு முன் புளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

    அனைத்தையும் ஆற வைத்து மிக்சியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த சட்னியில் கொட்டவும்.

    அவ்வளவுதான் சூப்பரான காரசாரமான பச்சை மிளகாய் சட்னி தயார்.

    Next Story
    ×