search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சூடான ஸ்நாக்ஸ்... பச்சைப் பட்டாணி போண்டா...
    X

    சூடான ஸ்நாக்ஸ்... பச்சைப் பட்டாணி போண்டா...

    • டீ, காபியுடன் சாப்பிட இந்த போண்ட சூப்பராக இருக்கும்.
    • இந்த ரெசிபியை 20 நிமிடத்தில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பட்டாணி - 200 கிராம்,

    கேரட் துருவல் - ஒரு டீஸ்பூன்,

    வெங்காயம் - 1

    தக்காளி, பச்சை மிளகாய் - தலா - 2,

    கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு,

    எண்ணெய் - 300 கிராம்,

    உப்பு - தேவையான அளவு.

    மேல் மாவுக்கு:

    கடலை மாவு - 150 கிராம்,

    அரிசி மாவு - 25 கிராம்,

    மிளகாய்த்தூள், உப்பு - சிறிதளவு.

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லித்தழை, புதினா, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    மசித்த பச்சை பட்டாணியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லித்தழை, புதினா, கேரட் துருவல் சேர்த்துப் பிசையவும்.

    இதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    மேல்மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தேவையான நீர் சேர்த்து தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பச்சைப் பட்டாணி போண்டா ரெடி.

    குறிப்பு: பச்சைப் பட்டாணி இல்லாத சமயத்தில் உலர்ந்த பட்டாணியை ஊறவைத்து, வேகவிட்டு அரைத்து பயன்படுத்தியும் இந்த போண்டாவை செய்யலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×