என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சமையல்
சமையல் டிப்ஸ்கள் இதோ உங்களுக்காக
- சிறிது நெய் விட்டு சாப்பிட்டால் உப்புமா ருசியாக இருக்கும்.
- கார்ன் பிளவர் மாவு கலந்து லேசான ஈரப்பதத்துடன் வறுத்தெடுத்தால் கோவக்காய் சுவையாக இருக்கும்.
* சாம்பார், ரசம், காரக்குழம்பு போன்றவைகளை தயார் செய்யும்போது அடுப்பில் இருந்து இறக்கி வைக்கும் தருவாயில் அரை டீஸ்பூன் வெல்லம் கலந்தால் சுவை கூடும்.
* கடலைப்பருப்பு, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை நறுக்கிவிட்டு அதனுடன் அரை டீஸ்பூன் ரவையும் கலந்து வடை சுட்டால் மொறுமொறுவென்றும் சுவையாகவும் இருக்கும்.
* எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து அதில் நறுக்கிய முட்டைக்கோஸை போட்டு வதக்கவும். பின்பு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீரே இல்லாமல் மிதமான தீயில் 5 நிமிடம் மூடி வைத்துவிட்டு இறக்கினால் முட்டைக்கோஸ் பொரியல் சுவையாக இருக்கும்.
* உப்புமா தயார் செய்யும்போது ரவையை பொன்னிறமாக வறுத்து, பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு 1-க்கு 3 மடங்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, கொதித்தவுடன் வறுத்த மாவை கொட்டி கிளறி, அது வெந்தவுடன் இறக்கவும். அதில் சிறிது நெய் விட்டு சாப்பிட்டால் உப்புமா ருசியாக இருக்கும்.
* புளிக்குழம்பு தயார் செய்யும்போது முதலில் தேவையான அளவு தனியா, வர மிளகாய், வெந்தயம் போன்றவற்றை பொன்னிறமாக வறுக்கவும். அந்த கலவையை மிக்சியில் அரைக்கவும். பின்னர் வாணெலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சிறிதளவு கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். அதில் புளிக்கரைசலை ஊற்றி கிளறவும். பின்பு மிக்சியில் அரைத்த கலவையை கொட்டி உப்பு, மஞ்சள் சேர்த்துவிட்டு குழம்பு கொதிக்கவும் இறக்கவும். அதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் வாசனை கமகமக்கும்.
* தோசைக்கல்லில் நறுக்கிய கோவக்காயை கொட்டி, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வதக்கி, தேவையான அளவு மிளகாய் தூள், உப்பு, கார்ன் பிளவர் மாவு கலந்து லேசான ஈரப்பதத்துடன் வறுத்தெடுத்தால் கோவக்காய் சுவையாக இருக்கும்.
* பாகற்காய் தொக்கு செய்யும்போது பாகற்காயுடன் சிறிதளவு புளிக்கரைசல் சேர்த்து, மிளகாய் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்றாக சுண்டி வந்ததும் சிறிதளவு வெல்லம் சேர்த்தால் கசப்பு தெரியாது. சுவையாகவும் இருக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்