search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சமையலறை டிப்ஸ்...
    X

    சமையலறை டிப்ஸ்...

    • சமையல் மேடையை சுத்தமாக துடைத்து ஈரமில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
    • மூலிகைகள் மற்றும் மூலிகை கீரைகளை பிளாஸ்டிக் கவரில் கட்டித்தான் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

    * சாமி அறை போல் சமையல் அறையும் தூய்மையாக இருந்தால் தான் ஈ, எறும்பு, புழு, பூச்சிகள் வராது. வெங்காயம், பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டால் அந்த வாசத்திற்கே பூச்சிகள் வராது. மேலும் சமையல் முடிந்ததும் சமையல் மேடையை சுத்தமாக துடைத்து ஈரமில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

    * அரிசி பாத்திரத்தில் வேப்பிலை போட்டு வைத்தால் வண்டு வராது. பருப்பு டப்பாக்களில் பூண்டின் நடுக்காம்புடன் உப்பை சேர்த்து துணியால் முடிச்சு போட்டு வைத்தால் பருப்பின் சுவையும் குறையாது, வண்டும் வராது.

    * காளான் மற்றும் கத்தரிக்காயை பிளாஸ்டிக்கவரில் போட்டு பிரிட்ஜில் வைக்கக்கூடாது.

    * ஏலக்காய், கிராம்பு, மிளகு ஆகியவற்றை ஒரே டப்பாவில் மூடி வைக்கலாம்.


    * உலர் திராட்சை, பேரீச்சையை வைக்கும் டப்பாக்களில் ஓரிரு கிராம்புகளை போட்டு வைத்தால் கெடாமலிருக்கும்.

    * மூலிகைகள் மற்றும் மூலிகை கீரைகளை பிளாஸ்டிக் கவரில் கட்டித்தான் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

    * அரைத்த மிளகாய் தூள் வைத்திருக்கும் டப்பாவின் மையப்பகுதியில் இரண்டு மிளகாய் வற்றல் போட்டு வைக்க தூளின் நிறம் மற்றும் தரம் மாறாது. பெருங்காயத்தையும் போடலாம்.

    * முருங்கைக்காயை அப்படியே பேப்பரில் சுருட்டி வைத்தால் ஒருவாரம் கெடாது. இதேபோல வாழை இலையை வைத்தால் காய்ந்தோ பழுத்தோ போகாது.

    * ஆப்பிளை நறுக்கி சர்க்கரை தண்ணீரில் போட்டு எடுத்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டப்பாவில் கொடுத்து அனுப்பினால் அப்படியே நிறம் மாறாமல் இருக்கும்.

    * அத்தி, கிஸ்மிஸ் பழம் போன்றவற்றை பிரிட்ஜில் வைக்கக்கூடாது. அக்ரூட் பழத்தை வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்தால் எளிதாக உடைக்கலாம்.

    * முருங்கை பிஞ்சை ரசத்தில் போட்டால் ரசம் ருசியாக இருக்கும். மோரில் சுக்கு பொடித்து சேர்க்க சுவை கூடும். கடலை மாவு மற்றும் பார்லி மாவை பாதி பாதி சேர்த்து பக்கோடா செய்தால் ருசி அமோகமாக இருக்கும்

    * அப்பளம், வடகம், வற்றலில் (காய்ந்த) வற மிளகாயை போட்டு வைக்க வண்டு, பூச்சிகள் வராது.


    * டீ தூள் டப்பாவில் ஆரஞ்சு பழத்தோலை போட்டு வைத்தால் டீ தூளில் ஆரஞ்சு வாசம் வரும். டீயும் ருசியாக இருக்கும்.

    * பச்சைநிற காய்கறிகளை சமைக்கும் போது தாளிக்கும் எண்ணெய்யில் சிறிது மஞ்சள் தூள் போட்டு வதக்க காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்கும்.

    * முறுக்கு மாவில் சிறிது நெய் சேர்த்து பிசைந்து முறுக்கு சுட, மொறுமொறுப்பாக நெய் வாசத்துடன் இருக்கும்.

    * நூடுல்ஸ் மீதமானால் அதனுடன் பச்சை காய்கறிகளை நறுக்கிப் போட்டு தயிர் சேர்த்து சாலட் செய்ய சூப்பராக இருக்கும்.

    Next Story
    ×