search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    தினை சர்க்கரை பொங்கல்
    X

    தினை சர்க்கரை பொங்கல்

    • வித்தியாசமாக ஆரோக்கியம் அதிகம் உள்ள தினை அரிசி பொங்கலை செய்யலாம்.
    • தினைகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

    பொங்கல் செய்யலாம் என்றாலே நம் நினைவில் வருது பச்சரிசி, வெல்லம் தான் ஆனால் சற்று வித்தியாசமாக ஆரோக்கியம் அதிகம் உள்ள தினை அரிசி பொங்கலை செய்யலாம். பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் தினை அரிசி பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. தினைகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கார்போஹைட்ரேட் மிக குறைவான அளவே இருக்கிறது. உங்கள் நாளை ஒரு இனிப்புடன் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் தினை பொங்கல் செய்யுங்கள். இது ஒரு ஆரோக்கியமான உணவாகும் கூட அமையும். இந்த தினை பொங்கல் உங்களை பசியாற்ற வைத்ததுமின்றி உடலில் சேரக்கூடிய சர்க்கரை அளவை தடுத்து நல்ல ஆரோக்கியமான உடல் எடையையும் பராமரிக்க செய்கிறது.

    தேவையான பொருட்கள்:

    தினை- 100 கிராம்

    கடலைப்பருப்பு, பாசிபருப்பு தலா- 25 கிராம்

    நெய்- 50 கிராம்

    ஜாதிக்காய் பொடி- ஒரு சிட்டிகை

    நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் தலா- ஒரு டீஸ்பூன்

    துருவிய கொப்பரை- 2 டீஸ்பூன்

    வெல்லம்- 150 கிராம்

    செய்முறை:

    தினை மற்றும் பருப்பு வகைகளை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து தேவையான அளவு நீர்விட்டு குழைய வேகவைக்கவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி தினை கலவையில் சேர்த்து பொங்கல் பதம் வரும் வரையில் கிளறி இறக்கவும்.

    சூடான நெய்யில் ஜாதிக்காய் பொடி, துருவிய கொப்பரை சேர்த்து வறுத்து பொங்கலில் சேர்க்க வேண்டும். இறுதியாக வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து பரிமாறவும்.

    Next Story
    ×