search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சத்துக்கள் நிறைந்த மிக்ஸ்டு வெஜிடபிள் சூப்
    X

    சத்துக்கள் நிறைந்த மிக்ஸ்டு வெஜிடபிள் சூப்

    • காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி சூப் செய்து கொடுக்கலாம்.
    • தினமும் ஏதாவது ஒரு சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

    தேவையான பொருட்கள் :

    பீன்ஸ் / அவரைக்காய் - தலா 50 கிராம்

    கேரட் - 50 கிராம்

    பெரிய வெங்காயம் - ஒன்று

    சின்ன வெங்காயம் - 100 கிராம்

    தக்காளி - 3

    புதினா இலைகள் - ஒரு கைப்பிடி

    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

    இஞ்சி - ஒரு அங்குல நீளமுள்ள துண்டு

    பூண்டு - 7பல்

    நசுக்கிய மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்

    நசுக்கிய சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்

    நசுக்கிய சோம்பு - அரை டேபிள்ஸ்பூன்

    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

    உப்பு - தேவையான அளவு

    வெண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    இஞ்சி மற்றும் பூண்டுப் பல்லை தோல் நீக்கி வைத்துக்கொள்ளவும்.

    அடுப்பில், குக்கரை வைத்து சூடானதும் வெண்ணெய் போட்டு உருகியதும் வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் காய்கறிகள், இஞ்சி மற்றும் பூண்டு, கொத்தமல்லித்தழை, புதினா, நசுக்கிய மிளகு, சீரகம், சோம்பு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.

    அதில் காய்கறிகளை விட மூன்று அங்குலம் அதிகமாகத் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி அடுப்புத் தீயைக் குறைத்து, 20 நிமிடங்கள் குறைந்த தீயிலேயே வேக விடவும்.

    அடுப்பை அணைத்து, பிரஷர் அடங்கியதும் மூடியைத் திறக்கவும்.

    காய்கறிகளில் உள்ள தண்ணீரை வடிகட்டி பரிமாறும்போது உப்பு மற்றும் கூடுதலாக மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான மிக்ஸ்டு வெஜிடபிள் சூப் ரெடி.

    சூப்பில் கடிப்பதற்கு காய்கறிகள் வேண்டும் என்று நினைப்பவர்கள், காய்கறிகளை வடிகட்டாமல், அப்படியே சூப்பில் சேர்த்துக் குடிக்கலாம். நறுக்கும்போது பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×