search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    அரை மணி நேரத்தில் செய்யலாம் நண்டு மசாலா
    X

    அரை மணி நேரத்தில் செய்யலாம் நண்டு மசாலா

    • சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்... சுவையில் அள்ளும்.
    • தோசை, இட்லியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    நண்டு - அரை கிலோ,

    தக்காளி - ஒன்று,

    சின்ன வெங்காயம் - 25 கிராம்,

    பச்சை மிளகாய் (சிறியது) - 2,

    கறிவேப்பிலை - ஒரு கொத்து,

    சோம்பு - ஒரு டீஸ்பூன்,

    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,

    பட்டை, பிரிஞ்சி இலை - தலா ஒன்று,

    குழம்பு மசாலா - 2 டேபிள்ஸ்பூன்,

    தேங்காய் - கால் மூடி,

    மிளகு - ஒரு டீஸ்பூன்,

    பூண்டு - 5 பல்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தக்காளி, சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

    ப.மிளகாயை கீறி வைத்து கொள்ளவும்.

    தேங்காய், மிளகு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    சுத்தம் செய்த நண்டுடன் குழம்பு மசாலா, சிறிதளவு உப்பு சேர்த்துப் பிசிறி வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் கீறிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் வதங்கிய பிறகு அதில் தக்காளி சேர்க்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் பிசிறி வைத்த நண்டை சேர்த்துக் கிளறவும்.

    பிறகு, அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

    இது ஓரங்களில் எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்துக்கு வந்தவுடன் இறக்கினால்... சுவையான நண்டு மசாலா தயார்.

    சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்... சுவையில் அள்ளும். வெங்காய சாம்பாருக்கு சூப்பர் காம்பினேஷன்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×