என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சமையல்
சப்பாத்திக்கு சூப்பரான மட்டன் நிஹாரி
- இதை சூடான சாதத்துடன் சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.
- இந்த ரெசிபி செய்வது மிகவும் எளிது.
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி - 500 கிராம்
வெங்காயம் - 2
கோதுமை மாவு - 4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 3
தனியா - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
கருப்பு ஏலக்காய் - 2
பச்சை ஏலக்காய் - 6
அன்னாசி பூ - 1
கடுக்காய் - 1 சிறியது
கிராம்பு - 6
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டு
ஜாதிப்பத்திரி - 3 துண்டு
கருஞ்சீரகம் - ½ டீஸ்பூன்
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
சுக்குப்பொடி - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2½ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
நிஹாரி மசாலா தயாரிப்பதற்கு பிரியாணி இலை, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், ஏலக்காய், அன்னாசி பூ, கடுக்காய், கிராம்பு, சீரகம், பட்டை, ஜாதி பத்திரி, கருஞ்சீரகம், சோம்பு ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். இவை 1 கிலோ ஆட்டுக்கறிக்கான மசாலா அளவாகும்.
ஆட்டுக்கறியை நன்றாக கழுவி அதனுடன் மல்லித்தூள், சுக்குப்பொடி, 2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரைத்து வைத்துள்ள 'நிஹாரி' மசாலாவில் பாதி அளவு சேர்த்து நன்றாகப் பிசைந்து கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
பின்பு பிரஷர் குக்கரில் ஒரு கப் அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் பொடிதாக நறுக்கிய ஒரு வெங்காயம்(முக்கால் பாகம்) சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் ஊற வைத்துள்ள ஆட்டுக்கறி கலவையை சேர்த்து, கறி பொரியும் வரை வறுக்கவும். சிறிது நேரத்தில் எண்ணெய் பிரிந்து மேலே வரும்.
அப்போது இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி கறியை வேக வைக்கவும். இரண்டு விசில் வந்து ஆவி அடங்கியதும் குக்கரை திறக்கவும்.
வெந்திருக்கும் கலவையில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவுடன் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைக்கவும். இந்தக் கரைசலை அடுப்பில் இருக்கும் கலவையில் ஊற்றி கிளறவும். கலவை சிறிது சிறிதாக கெட்டியாக ஆரம்பிக்கும்.
பிறகு அதனை மூடி குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இப்போது வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும், அதில் மீதியுள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு அதனுடன் அரை டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், அரை டீஸ்பூன் 'நிஹாரி மசாலா' சேர்த்து வறுக்கவும்.
பின்பு இந்த தாளிப்பை கொதித்துக் கொண்டிருக்கும் நிஹாரியுடன் சேர்த்து கிளறவும். இப்போது சுவையான 'மட்டன் நிஹாரி' தயார்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்