search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    உடற்பயிற்சியோ, டயட்டோ தேவையில்லை இதை ட்ரை பண்ணுங்க
    X

    உடற்பயிற்சியோ, டயட்டோ தேவையில்லை இதை ட்ரை பண்ணுங்க

    • கம்புவை சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும்.
    • ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    சோளம்- (வெள்ளை சோளம்) 200 கிராம்

    கம்பு- 200 கிராம்

    பாசி பயறு- 200 கிராம்

    அரிசி- 100 கிராம்

    சீரகம்- கால் டீஸ்பூன்

    எள்- ஒரு டீஸ்பூன்

    கேரட்- 1

    பீன்ஸ்-3

    பட்டானி- ஒரு கைப்புடி

    மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்

    செய்முறை

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் வெள்ளை சோளத்தை போட்டு மனம் வரும்வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு கம்புவை சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும். அரிசியையும் இதேபோல பொரியும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பாசிபயறையும் வறுத்து எடுக்க வேண்டும்.

    வறுத்த அனைத்தையும் சேர்த்து தட்டில் கொட்டி ஆறவைத்து அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நைசாக இல்லாமல் ரவை பதத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ளலாம்.

    இந்த மாவினை ஒரு கப் எடுத்துகொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கால் டீஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் எள் போட வேண்டும். இதில் ஒரு கொத்து கறிவேப்பிலை, இஞ்சி ஒரு துண்டு துருவிவிட்டு சேர்க்க வேண்டும்.

    இந்த தாலிப்பை பச்சைவாடை போகிற வரை வதக்கிய பிறகு இதில் நறுக்கி வைத்து பீன்ஸ், கேரட், பட்டானி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வதங்கும்போதே இதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

    பின்னர் 3 கப் சூடான தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் கொதித்து வரும்போது அதில் நாம் ஏற்கனவே பொடித்து வைத்துள்ள பொடியை இதில் சேர்க்க வேண்டும். அதனை கிளறி இதில் 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து திறந்து பாத்திரத்தில் ஒட்டாதவாறு கிளறி அதில் கால் டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கிளறி விட வேண்டும். அதன்பிறகு இறக்கி வைத்து கறிவேப்பிலை மல்லிதலை சேர்த்து பரிமாறலாம்.

    Next Story
    ×