என் மலர்
சமையல்
உடல் எடையை குறைக்க உதவும் ஓட்ஸ் வெங்காய தோசை
- ஓட்ஸில் நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகமாக உள்ளது.
- சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகும்.
தேவையான பொருள்கள் :
ஓட்ஸ் - 3 கப்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
சோள மாவு - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
தயிர் - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
* பச்சை மிளகாய் மற்றும் சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வறுத்த ஓட்ஸை போட்டு அதனுடன் சிறிது வெந்நீர், தயிர், அரிசி மாவு, சோள மாவு, அரைத்த பச்சை மிளகாய் கலவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
* கடைசியாக அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இதில் கரைத்த மாவை மெல்லியதாக தோசை போல ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான, ஆரோக்கியமான ஓட்ஸ் தோசை தயார்.
* இதை அனைத்து விதமான சட்னியுடனோ, வெறும் தோசையாகவோ சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.