search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    மாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் வெஜிடபுள் கட்லெட்
    X

    மாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் வெஜிடபுள் கட்லெட்

    • வெங்காயம் வதங்கியவுடன் பீன்ஸ், கேரட், கோஸ் காய்கறிகளை சேர்க்கவும்.
    • பன்னீர் சேர்த்து கிளறி, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    பன்னீா் - 500 கிராம்

    உருளைக்கிழங்கு - 3

    பூண்டு பொடியாக நறுக்கியது - 1/2

    வெங்காயம் - 2

    பீன்ஸ் - 1/4 கப்

    கேரட் - 1/4 கப்

    கோஸ் - 1/4 கப்

    குடை மிளகாய் - 1/4 கப்

    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

    மிளகு தூள் - 1 ஸ்பூன்

    சீரக தூள், தனியா தூள், மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    உப்பு, எண்ணெய் தேவையான அளவு

    சோள மாவு - 5 ஸ்பூன்

    பிரெட் தூள் - தேவையான அளவு

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும். பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்க்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் பீன்ஸ், கேரட், கோஸ் காய்கறிகளை சேர்க்கவும்.

    காய்கள் லேசாக வதங்கியவுடன் குடை மிளகாய் சேர்த்து உப்பு சேர்க்கவும். பின்னர் இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து, சீரக தூள், தனியா தூள், மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து வதக்கவும். வதக்கிய பின்னர் பன்னீர் சேர்த்து கிளறி, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

    ஆறிய பின்னர் கைகளால் பிசைந்து சிறுசிறு பகுதிகளாக பிரித்து உருண்டைகளாக உருட்டி, கட்லெட் வடிவில் செய்து கொள்ளவும். பின்பு சோள மாவுடன் நீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.

    கட்லெட்டுகளை சோளமாவு கலவையில் முக்கி பின் பிரெட் தூளில் நன்றாக பிரட்டி எடுத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்தால் சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் வெஜிடபுள் கட்லெட் தயார்.

    Next Story
    ×