search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    டீயுடன் சாப்பிட சூப்பரான பன்னீர் - ஆலு ஸ்டஃப்டு போண்டா
    X

    டீயுடன் சாப்பிட சூப்பரான பன்னீர் - ஆலு ஸ்டஃப்டு போண்டா

    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • 15 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 150 கிராம்,

    அரிசி மாவு - 25 கிராம்,

    மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு,

    எண்ணெய் - தேவையான அளவு.

    ஸ்டஃப்பிங் செய்ய:

    உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசிக்கவும்),

    பன்னீர் துண்டுகள் - 50 கிராம்,

    தனியா தூள் - ஒரு டீஸ்பூன்,

    கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,

    நறுக்கிய கொத்த மல்லித்தழை, பச்சை மிளகாய் - சிறிதளவு,

    எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்,

    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - சிறிதளவு.

    செய்முறை:

    ஸ்டஃப்பிங் செய்யக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு கலந்து சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து நீர்விட்டு தோசை மாவைவிட சற்று தளர்வாக கரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் தயார் செய்து வைத்த உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பன்னீர் - ஆலு ஸ்டஃப்டு போண்டா ரெடி.

    Next Story
    ×