என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சமையல்
![சூப்பரான ஸ்நாக்ஸ் பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ் சூப்பரான ஸ்நாக்ஸ் பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/28/1827819-crispy-potato-fingers.webp)
சூப்பரான ஸ்நாக்ஸ் பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 10 நிமிடத்தில் இந்த் ஸ்நாக்ஸ் செய்யலாம்.
- குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு - 4
ரவை -1 கப்
கறிவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் தேவையான உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் ரவையை சேர்த்து கட்டி வராமல் நன்றாக கிளறி விட வேண்டும். 10 நிமிடம் கழித்து இறக்கி விட வேண்டும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.
ரவையில் மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பிசைந்த கலவையை விரல் வடிவில் உருட்டி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அதில் உருட்டி வைத்த ரவை உருளைக்கிழங்கை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பொரித்ததை ஒரு தட்டில் வைத்து தக்காளி சாஸுடன் சேர்த்து சாப்பிட்டால் கலக்கல் சுவையாக இருக்கும்..