search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    ஹோட்டல் ஸ்டைல் ராஜ்மா தால் மக்னி செய்யலாம் வாங்க...
    X

    ஹோட்டல் ஸ்டைல் ராஜ்மா தால் மக்னி செய்யலாம் வாங்க...

    • ராஜ்மாவில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
    • இது சப்பாத்தி, ரொட்டி, நாண், பூரியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    ராஜ்மா - 1 கப்

    வெங்காயம் - 2

    தக்காளி - 3

    பச்சை மிளகாய் - 1

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிதளவு

    மில்க் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    சீரகத் தூள் - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    கருப்பு ஏலக்காய் - 3

    கிராம்பு - 3

    உப்பு - சுவைக்கேற்ப

    வெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * தக்காளியை அரைத்துகொள்ளவும்.

    * ராஜ்மாவை நீரில் 9 மணிநேரம் ஊற வைத்த பின் வேக வைத்து கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் சீரகம், ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

    * பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒருமுறை கிளறி, அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் சேர்த்து கிளறிய பின்னர் தேவையான அளவு நீரை ஊற்றி சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.

    * அடுத்து வேக வைத்துள்ள ராஜ்மாவை சேர்த்து, கரண்டியால் நன்கு மசித்து விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

    * கிரேவி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மில்க் க்ரீம், சிறிது வெண்ணெய், கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான ராஜ்மா தால் மக்னி தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×