என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சமையல்
![10 நிமிடத்தில் செய்யலாம் காரசாரமான செட்டிநாடு மிளகாய் சட்னி 10 நிமிடத்தில் செய்யலாம் காரசாரமான செட்டிநாடு மிளகாய் சட்னி](https://media.maalaimalar.com/h-upload/2022/12/04/1801643-red-chilli-chutney.webp)
X
10 நிமிடத்தில் செய்யலாம் காரசாரமான செட்டிநாடு மிளகாய் சட்னி
By
மாலை மலர்4 Dec 2022 11:28 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இட்லி, தோசைக்கு இந்த சட்னி அருமையாக இருக்கும்.
- இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். ருசியோ அருமை.
தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் - 10
பூண்டு பல் - 3
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு
தாளிக்க:
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
செய்முறை
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.
சுவையான காரசாரமான செட்டிநாடு மிளகாய் சட்னி தயார்.
இட்லி, தோசையுடன் பரிமாறவும்.
Next Story
×
X